2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

சேவை செய்யும் இலக்குடனேயே களமிறங்கியுள்ளோம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 17 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

மக்களுக்கு சேவை செய்யும் இலக்குடனேயே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இப்பொதுத்தேர்தலில் களம் இறங்கியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட வேட்பாளர் எம். அப்துல் மஜீட் தெரிவித்தார்.

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்  தொடர்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,  'அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் மனித நேயத்தோடு அரவணைத்து மக்கள் சேவைக்கு ஊக்கம் அளித்துள்ளார்.

எனது சேவை தொடர வேண்டுமா? இல்லையா என்பதை  மக்கள் தீர்மானிக்கவேண்டும். இத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்ட மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என நம்புகின்றேன்' என்றார்.

'மேலும், அம்பாறை மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்களுக்கு விடிவை தரக்கூடிய வகையில் தமிழ் பேசும் மேலதிக மாவட்டமொன்று உடனடியாகத் தேவைப்படுகின்றது.   எதிர்வரும் பொதுத்தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மூன்று ஆசனங்களை கைப்பற்றுவதற்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'  எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X