2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

23, 218 அரச உத்தியோகஸ்தர்கள் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பம்

Gavitha   / 2015 ஜூலை 21 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் அம்பாhறை  மாவட்டத்தில் 23,218 அரச உத்தியோகஸ்தர்கள் தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் திலின விக்கிரமரத்ன தெரிவித்தார்.

தபால் மூல வாக்காளர்கள் தொடர்பில்  செவ்வாய்க்கிழமை (21) ஊடகங்களுக்கு கருத்து  தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச உத்தியோகஸ்தர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களில், 20,494 விண்ணப்பங்கள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

உரிய விண்ணப்பதாரி ஒப்பமிடாமை, விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட தகவல்களை பிழையாக குறிப்பிட்டமை, திணைக்கள தலைவர்களினால் உறுதிப்படுத்தப்படாமை போன்ற காரணங்களினால், 1,977 விண்ணப்பங்களும் உரிய திகதிக்கு பிந்திக் கிடைத்ததன் காரணமாக, 747 விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X