Gavitha / 2015 ஜூலை 23 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
நாட்டில் நிலவும் சிறந்த அரசியல் சூழ்நிலை காரணமாக இம்முறை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கடமையாற்றுவது இலகுவாக அமையும் என அம்பாறை மாவட்ட தேர்தல் கண்காணிப்பு பபரல் அமைப்பின் பிராந்திய அதிகாரி கே.சத்தியநாதன் தெரிவித்தார்.
தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் இன்று வியாழக்கிழமை (23) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தங்களது கண்காணிப்பு நடவடிக்கைகள் அம்பாறை, சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் மேற்கொள்ளப்படுவதற்கான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கையில் இரு வெளிநாட்டு கண்காணிப்பு உத்தியோகத்தர்கள் அடங்கலாக 252பேர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.மேலும், இரு பிரதேச செயலகங்களுக்கு ஒரு கண்காணிப்பு வாகனம் பயன்படுத்தப்படவுள்ளது என்றார்.
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago