2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கல்முனை ஐக்கிய சதுக்கம் பொதுமக்களின் பாவனைக்கு கையளிப்பு

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கல்முனை மாநகர சபையினால் சுமார் இரண்டு கோடி ரூபாய் செலவில்; அமைக்கப்பட்டு வருகின்ற கல்முனை ஐக்கிய சதுக்கத்தின் முதற்கட்ட அபிவிருத்தித் திட்டம் ஞாயிற்றுக்கிழமை (09) மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

ஐக்கிய சதுக்க திட்டத்தின் கீழ் கல்முனை சந்தாங்கேணி மைதானத்துக்கான பார்வையாளர் அரங்கு அமைவதுடன் வர்த்தக கடைத்தொகுதி, உணவகம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X