Kogilavani / 2015 ஓகஸ்ட் 14 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்
'அம்பாறை மாவட்டத்தில் நெற் காணிகளை கரும்பு செய்கைக்கு மாற்றியமை பாரிய பிரச்சினையாக உள்ளது.
அப்பிரச்சினையை நூறு நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ், தீர்த்து வைக்கமுடியாமல் போய்விட்டது. இந்தத் தேர்தலில் நான் வெற்றிபெற்றால், இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண்பேன்' என ஐக்கிய தேசியக் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான பி.தயாரத்ன தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேச அமைப்பாளர் எம்.ஏ.ஆர்.ஏ.புஹாரி தலைமையில் அவரது, இல்லத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பிரசாரத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'எமது நாடு கடந்த ஜனவரி 8 ஆம் திகதி வரை, ஆபத்தான நிலையிலே காணப்பட்டது. ஜனவரி 8 ஆம் திகதிக்கு பிறகு மூவின மக்களும் ஒற்றுமையாக ஒரே பாதையில் செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தை இரண்டாக பிரிப்பதற்கு சிலர் யோசனைகளை முன்வைத்தனர். இது சுமூகமற்ற நிலையை தோற்றுவிக்கும். எனவே மூவின மக்களும் ஒற்றுமையாக இருந்தால் பிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும்' என்றார்.
'நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டத்தையும் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று மக்களுக்கு இந்த நல்லாட்சியில் வழங்க என்னாலான நடவடிக்கைகளை எடுப்பேன்' என அவர் மேலும் கூறினார்.

2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago