2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

கூட்டமைப்பு வேட்பாளரின் ஆதரவாளரைத் தாக்கிய மூவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளரைத் தாக்கிய சந்தேகநபர்கள் மூவரையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் உத்தரவிட்டார்.

 சந்தேகநபர்கள் மூவரும்  (20) சட்டத்தரணி ஏ.எச்.ஏ.சமீம் ஊடாக அக்கரைப்பற்று பொலிஸில் சரணடைந்ததையடுத்தே கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை  நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்கண்ட உத்தரவைப் பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X