2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

25 வர்த்தகர்களுக்கு எதிராக 35,000 ரூபா அபராதம்

Kogilavani   / 2013 நவம்பர் 15 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டத்தின் பாவனையாளர் சட்டத்தை மீறும் வகையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த 25 வர்த்தகர்களுக்கு எதிராக அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் 35,000 ரூபா தண்டப்பணம் வித்தித்து தீர்ப்பளித்தார்.

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஆலையடிவேம்பு, இறக்காமம், வரிப்பத்தான்சேனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த வர்த்தகர்களுக்கே இவ்வாறு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட பாவனையாளர் அலுவலக அதிகாரசபை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கiயின் போது இவர்கள் புதன்கிழமை (13) கைதுசெய்யப்பட்டனர்.

இதன்போது பாவனையாளர் சட்டங்களை மீறும் வகையில் விலைப்பட்டியலை காட்சிப்படுத்த தவறியமை, குறித்த விலைக்கு அதிமான விலையில் பொருட்கள் விற்பனை செய்தமை, காலாவதியான பொருட்களை அகற்றாமல் வைத்திருந்தமை போன்ற
குற்றங்கள் இவர்களுக்கு எதிராக சாட்டப்பட்டுள்ளன.

மேற்படி நபர்கள், புதன்கிழமை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, நீதிவான் ரீ.சரவணராஜா ரூபா 35,000 தண்டப்பணம் விதித்து தீரப்பளித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .