Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 ஏப்ரல் 19 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எல்.எஸ்.டீன்
அக்கரைப்பற்று, கல்வி வலயத்திலுள்ள சில பாடசாலை மாணவர்களுக்கு, இன்னும் புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படாமை குறித்து, கல்விச் சமூகமும் பெற்றோர்களும், விசனம் தெரிவித்துள்ளனர்.
2018ஆம் ஆண்டுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை, சில பாடங்களுக்கான புதிய பாடப்புத்தகங்கள் வழங்கப்படாதமையால், மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
சில பாடங்களுக்காக, கடந்த வருடம் வழங்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட பழைய புத்தகங்களே வழங்கப்பட்டுள்ள நிலையில், அவற்றில் பல பக்கங்கள் கிழிந்தும் சிதைவடைந்துக் காணப்படுவதால், குறிப்பிட்ட சில பாடப்பரப்புகளைக் கற்பதில், மாணவர்கள் இடர்களை எதிர்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துல்லாவிடம் வினவிய போது, “இவ்வருடம், புதிய பாடப்புத்தகங்களில் 60 சதவீதத்தையும் பழைய பாடப்புத்தகங்களில் 40 சதவீதத்தையும் வழங்குமாறே உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறே, மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன” என்றுக் கூறினார்.
“அவ்வாறு பாவிக்க முடியாத பழைய புத்தகங்கள் வழங்கப்பட்டிருந்தால், அப்பாடசாலை அதிபர் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில், அது குறித்து கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்கு அறிவித்துப் பெற்றுக்கொடுக்க முடியும்” எனவும் அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மாணவர்களின் நலன் கருதி, புதிய பாடப்புத்தகங்களை வழங்க பாடசாலை அதிபர்கள், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
6 hours ago