2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

3 ஆயிரம் லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது

Freelancer   / 2022 ஜூன் 02 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பள்ளிக்குடியிருப்பில் வாகன தரிப்பிடம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லீற்றர் டீசல் உடன் ஒருவரை  இன்று வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு (02) கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கமைய,

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.எம். எஸ். பண்டார விஜயதுங்கவின் வழிகாட்டலில், போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்டர் நூர்தீன் தலைமையிலான, பொலிஸ் உத்தியோகத்தர்களான 25125 அனஸ், 8313 நவீனகரன், 76811 சஞ்ஜீவ, 6494 கஜேந்திரன், 92878 அனோஜன், 4051 லதீப் ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் சம்பவதினமான இன்று மாலை 6 மணியளவில் குறித்த  வாகன தரிப்பிட கட்டிடத்தை முற்றுகையிட்டு சோதனையிட்டனர்.

இதன்போது, 3 தண்ணீர் தாங்கி பரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் லீற்றர் டீசலை கைப்பற்றியதுடன் ஒருவரை கைது செய்தனர் 

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர் 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .