Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
A.K.M. Ramzy / 2020 நவம்பர் 26 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்கரைப்பற்று சுகாதாரப் பணிப்பாளர் பிரிவிலுள்ள அக்கரைப்பற்று சந்தையில் இன்று வியாழக்கிழமை எழுந்தமனமாக 144 வியாபாரிகளுக்கு பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இதில்,21 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாக்கப்பட்டுள்ளதென தெரிவித்த கல்முனைப் பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் சுகுனன், மொத்தமாக 31 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர்;இவர்கள் அனைவரும் பாலமுனை வைத்தியசாலையில் (தனிமைப்படுத்தல்) அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago