2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

35 விவசாய கிணறுகளை அமைக்க அமைச்சர் உறுதி

Super User   / 2013 ஜனவரி 06 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய பிரதேசங்களில் 35 விவசாய கிணறுகளை அமைப்பதற்கான நிதியினை வழங்குவதாக விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன உறுதியளித்தார்.

விவசாய அபிவிருத்தி தொடர்பான கள விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்துக்கு வருகை தந்திருந்த விவசாய அமைச்சர் அபேவர்த்தன, தங்கவேலாயுதபுரத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே மேற்கண்ட உறுதியினை வழங்கியிருந்தார்.

அம்பாறை மாவட்ட நாhளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவின் மேற்படி பிரதேச விவசாயிகளின் நன்மை கருதி விடுத்த, வேண்டுகோளுக்கிணங்கவே – குறித்த கிணறுகளை அமைத்து தருவதாக அமைச்சர் அபேவர்த்தன உறுதியளித்தார்.

ஒவ்வொன்றும் சுமார் 03 லட்சம் ரூபாய் பெறுமதியான 35 விவசாயக் கிணறுகள் - தைப் பொங்கல் தினத்துக்கு முன்னதாக அமைக்கப்படும் என்று அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய பிரதேசங்களிலுள்ள சுமார் 1,500 குடும்பங்களின் விவசாய தேவை கருதியே - மேற்படி கிணறுகள் அமைக்கப்படவுள்ளன. கஞ்சிகுடியாறு மற்றும் தங்கவேலாயுதபுரம் ஆகிய பிரதேசங்களிலுள்ள மக்கள் - நெற் செய்கையில் ஈடுபடுவதோடு சோளம் மற்றும் கச்சான் உள்ளிட்ட சேனைப் பயிற்ச்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, கடந்த கிழக்கு மாகாண சபையில் விவசாய அமைச்சராகவிருந்த ரி.நவரட்ணராஜாவின் முயற்சியினால் இப்பகுதிகளில் விவசாயக் கிணறுகள் அமைக்கும் முகமாக நிலம் தோண்டப்பட்டிருந்த நிலையில் - மாகாண சபை கலைக்கப்பட்டது.

இதன் காரணமாக, அந்தக் கிணறுகளை அமைக்கும் வேலைகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அமைச்சர் கலந்துகொண்ட மேற்படி நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன, கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X