2025 மே 07, புதன்கிழமை

38,608 பாதயாத்திரிகர்கள் காட்டுப்பாதையினூடாக கதிர்காமம் பயணம்

Editorial   / 2019 ஜூலை 10 , பி.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

கதிர்காமத்திற்கான குமண காட்டுவழிப்பாதை  நேற்றுமுன்தினத்துடன்(09) மூடப்பட்ட நிலையில் இவ்வருடம்  38,608 பாதயாத்திரிகர்கள் இப்பாதையினூடாக கதிர்காமத்தை சென்றடைந்துள்ளதாக குமண சரணாலய முன்னரங்கு பாதுகாப்பு அலுவலக   அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

 உகந்தை ஸ்ரீ முருகன் ஆலயத்திலிருந்து குமண காட்டு வழிப்பாதையினூடான மேற்கொள்ளப்பட்ட காதிர்காம பாதயாத்திரையானது கடந்த (27) ஆம் திகதி காலை ஆரம்பமானது. உகந்தை முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் ஆரம்பமான பாதயாத்திரையினை தேசிய ஒருமைப்பாடு அரசகருமமொழிகள் சமூகமுன்னேற்ற, மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர்   மனோகணேசன்  மற்றும் அம்பாறை  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்  கவீந்திரன் கோடீஸ்வரன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், உள்ளிட்ட இராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு பாதையினை திறப்பு வைத்தமை குறிப்படத்தக்கது.

 இதேவேளை, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் பாதயாத்திரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் எவ்வித மிருகங்களின் தொல்லையோ அல்லது அசம்பாவிதங்களே இவ்வருடம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X