2024 மே 02, வியாழக்கிழமை

5 நாட்களில் 10 வீடுகள் சேதம்

Janu   / 2023 டிசெம்பர் 19 , பி.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

காட்டு யானைகளின் இடைவிடாத அட்டகாசத்தால் அம்பாறை மாவட்டத்தின் பங்தாறதுவ கிராம மக்கள் பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்விடயமாக  இப்பிரதேசத்திற்குப் பொறுப்பாகவுள்ள வன விலங்கு பாதுகாப்பு அதிகாரி அஜித் குணரெட்ண தமக்கு வழங்கப்பட்ட வாகனம் பழுதடைந்துள்ள நிலையில் அம்பாறை பிரதேச செயலகத்திடமும்   மாவட்ட செயலகத்திடமும் வாகன வசதி செய்து தரும்படி பலமுறை கேட்டும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்ததுடன், மோட்டார் சைக்கிளில் சென்று யானைக்கூட்டத்தைத் துரத்த தமது குழுவால் முடியாதுள்ளது என தெரிவித்துள்ளார். 

விவசாயத்தையே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள இப்பிரதேச மக்கள் அடுத்த போகத்திற்காகச் சேமித்து வைத்திருந்த விதை நெல் அனைத்தையுமே காட்டு யானைகள் உண்டு தீர்த்துள்ளதாகக் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .