2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

57 பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைக்கு நியமனம்

Kogilavani   / 2013 நவம்பர் 06 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்


மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களில் 57 பட்டதாரிகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையில் இன்று புதன்கிழமை (06) நிரந்தர நியமனம் செய்யப்பட்டனர்.

நியமனம் பத்திரம் கையளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற புதன்கிழமை (6) நடைபெற்றது.

இந்நிகழ்வில்,  திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.ஏ.பஸீர், ஏ.நிஸார்தீன், திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட் உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .