2026 ஜனவரி 25, ஞாயிற்றுக்கிழமை

59 மாணவர்களை ஆஜராகுமாறு தனித்தனியாக அழைப்பாணை

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜனவரி 03 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 59 மாணவர்களை, எதிர்வரும் 5ஆம் திகதியன்று ஆஜராகுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தினால், தனித்தனியாக இன்று புதன்கிழமை அழைப்பாணை விடுக்கப்பட்டது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீட மாணவர்கள் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இயங்கிவரும் நிருவாக பிரிவு கட்டடத்தினுள் அத்துமீறி நுழைந்து கடமைகளைச் செய்யவிடவில்லையென அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பில்  பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் பீடங்களைச் சேர்ந்த 05 மாணவர்களுக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை இரத்துச் செய்யுமாறு கோரி,  பல்கலைக்கழக நிருவாக கட்டடத்தினுள் கடந்த புதன்கிழமை முதல் மாணவர்கள் தொடர்ச்சியான மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம் நடத்திவரும் மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம், இன்று (03) மாலை 4 மணியளவில் கட்டளை பிறப்பித்துள்ளது.

மாணவர்கள் அத்துமீறி நுழைந்து தொடர்ச்சியான மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நிருவாக கடமைகளை செய்யமுடியாது போயுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம். நாஜீம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X