2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

6 வீதமான சீனி உற்பத்தி: 94 வீதமான சீனி இறக்குமதி

Kogilavani   / 2013 மார்ச் 12 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


'எமது நாட்டில் தற்போது 6 வீதமான சீனியே உற்பத்தியே செய்யப்படுகின்றது. ஏனைய 94 வீதமான சீனியும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுவருகின்றது. இதனால் எமது நாட்டின் வளங்கள் பயன்படத்தப்படாமலுள்ளன' என சீனி உற்பத்தித்துறை அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்தார்.

சீனி உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு அதற்கான பிரதான மூலப் பொருளான கரும்பு உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் நேற்று அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

'மஹிந்த சிந்தனை திட்டத்தில், 50 வீதமான சீனி எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதுடன் அதனை துரிதமாக நடைமுறைப்படுத்தும் முகமாக அதற்காக தனியானதொரு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளளது.

அம்பாறை மாவட்டத்திலும் கரும்பு உற்பத்தியினை அதிகரிக்கச் செய்யவேண்டும். அத்துடன் இங்க பாரிய சீனித் தொழிற்சாலை உள்ளது.

அதனுடாக கூடுதலான உற்பத்திகளைப் பெறவேண்டும்' எனவும்  அவர்  கூறியுள்ளார்.
அமைச்சர் இங்கு கருத்து தெரிவிக்கையில்

'எமது நாட்டில் தற்போது 6 வீதமான சீனியே உற்பத்தியே செய்யப்படுகின்றது. ஏனைய 94 வீதமான சீனியும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுவருகின்றது. இதனால் எமது நாட்டின் வளங்கள் பயன்படத்தப்படாமலுள்ளன.

மஹிந்த சிந்தனை திட்டத்தில், 50 வீதமான சீனி  எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதுடன் அதனை துரிதமாக நடைமுறைப்படத்தும் முகமாக அதற்காக தனியானதொரு அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளளது.

அம்பாறை மாவட்டத்திலும் கரும்பு உற்பத்தியினை அதிகரிக்கச் செய்யவேண்டும். அத்துடன் இங்க பாரிய சீனித் தொழிற்சாலை உள்ளது. அதனுடாக கூடுதலான உற்பத்திகளைப் பெறவேண்டும்' என அவர்  கூறினார்.

சீனி உற்பத்தித்துறை அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, சிரேஷ்ட அமைச்சர் பி.தயரத்ன, மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, நாடாளுமன்ற உறுப்பினர் சிறியாணி விஜயவிக்ரம, அமைச்சின் செயலாளர்கள் மேலதிக அரசாங்க அதிபர் அசங்க அபேவர்த்தன உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X