Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2015 நவம்பர் 19 , மு.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஐ.ஏ.ஸிறாஜ்
கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் அனுசரணையில் அக்கரைப்பற்று வலயக் கல்விப்பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு எதிர்வரும் 28ஆம்,29ஆம் திகதிகளில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை அக்கரைப்பற்று ஆயிஷா மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக தமிழ் பாட பிரிவுக்கான உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.எம்.ஹனீபா இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
மேலும்,'2016ஆம் ஆண்டில் தரம் 7இல் தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான செயலமர்வு-2015' எனும் தலைப்பில் இச்செயலமர்வு நடைபெறவுள்ளதாகவும் இது தொடர்பான சுற்று நிரூபம் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிமினால் அக்கரைப்பற்று வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட உரிய பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, அக்கரைப்பற்று வலயக் கல்விப் பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 06 தொடக்கம் 11 வரையிலான விஞ்ஞானப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தர விஞ்ஞானப் பிரிவில் உயிரியல்,இரசாயனவியல்,பௌதிகவியல்,இணைந்த கணிதம் மற்றும் தொழில்நுட்பவியல் ஆகிய பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்குமான பயிற்சிப்பட்டறை எதிர்வரும் 21ஆம், 22ஆம், 28ஆம் திகதிகளில் அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாக அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக விஞ்ஞான பாடத்துக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.ஏ.வாஹிட் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிமின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் நடைபெறவுள்ள இப்பயிற்சிப் பட்டறையில் பாட அமுலாக்கல், பரிசோதனைச் செயற்பாடுகள், பரிகாரக் கற்பித்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வை எட்டுதல் மற்றும் 2016ஆம் ஆண்டுக்கான செயற்திட்டம் தயாரித்தல், அலகு ரீதியான வேலைப்படிவம் தயாரித்தல்,தரம் 11க்கான பரிகாரக் கற்பித்தல், புத்தகம் தொடர்பான கற்பித்தல் நுட்பங்கள் போன்றவை தொடர்பில் ஆலோசனை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
9 hours ago