2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

அக்கரைப்பற்றில் 29 பேர் கைது

Freelancer   / 2021 ஜூன் 18 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பயணத் தடையை மீறி சட்ட விரோதமாக வீதியில் நடமாடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 29 நபர்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம். சதாத் இன்று (18) தெரிவித்தார்.

மேலும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், பிரதான பொலிஸ் பரிசோதகருமான டபிள்யு.எம்.எஸ்.பி. விஜயதுங்கவின் தலைமையில் நேற்று (17) அக்கரைப்பற்று நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பயணத்தடையை மீறி வீதிகளில் நடமாடியவர்கள் மற்றும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட வர்த்தகர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பயணத்தடையை மீறி சட்டவிரோதமாக வீதிகளில் உலாவுபவர்கள் அனுமதிப் பத்திரமின்றி வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் திறந்து வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்படும்  எனவும் தெரிவித்தார்.

அத்தியவசிய தேவைகளுக்காக வெளியில் செல்பவர்கள் முகக்கவசம் அணியாமலும், சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிக்காமலும் செல்வதாக அறியக் கிடைத்துள்ளது. இவர்களும் கைது செய்யப்படுவார்கள் எனத் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் தொடர்ச்சியாக விசேட ரோந்து நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு, சட்டவிரோதமாக வீதிகளில் உலாவுவோர் கைது செய்யப்படுவதுடன், சட்டநடவடிக்கையும்  எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இக் காலகட்டத்தில் மக்கள் இறுக்கமான நடைமுறைகளை பின்பற்றி செயற்பட வேண்டுமெனவும், அத்தியவசிய தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாமெனவும்  தெரிவித்தார்.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .