2025 மே 05, திங்கட்கிழமை

அக்கரைப்பற்றில் தனியார் பஸ் சாரதிக்கு கொரோனா

Princiya Dixci   / 2020 நவம்பர் 19 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீகே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா, எம்.ஏ.றமீஸ்

அக்கரைப்பற்றில் இருந்து கொழும்புக்கு நடத்தப்படுகின்ற தனியார் பஸ் சேவையில் சாரதியாகக் கடமையாற்றுகின்ற வறக்காப்பொலயைச் சேர்ந்த ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பிசிஆர் சோதனை மூலம்  உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் பறூஸா நக்பர், இன்று (19) தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்தச் சாரதியுடன் நெருங்கிப் பழகியவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளில், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரிகள் குழுவினர், கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஜி.சுகுணனின் ஆலோசனைப்படி ஈடுபட்டு வருகின்றனர். 

இதேவேளை, தென் பகுதியிலிருந்து மாங்காய் கொள்வனவு செய்ய வந்த லொறி சாரதியுடன் உதவிக்கு வந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்ததை அடுத்து, அக்கரைப்பற்றில் அவர் மாங்காய்களைக் கொள்வனவு செய்த மூன்று குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X