2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அக்கரைப்பற்று மாநகர பிரதி மேயராக யாசீர்

Editorial   / 2019 ஜூலை 09 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நூருல் ஹுதா உமர்  

அக்கரைப்பற்று மாநகர சபையின் புதிய பிரதி மேயராக காதிரிய்யா வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்த எம்.சீ.எம்.யாசீருக்கு வழங்கப்பட்டுள்ளதாக, வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள இதேவேளை,  தேசிய காங்கிரஸின் தேசிய தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவின் சிபாரிசில் தெரிவத்தாட்சி அதிகாரி திலின விக்ரமரத்னவினால் நியமனம் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த ஜுலை 4ஆம் திகதி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயராக பதவி வகித்துவந்த அஸ்மி அப்துல் கபூர், மற்றும்  கட்சியின் ஏனைய உறுப்பினர்களுக்கும் சுழற்சி முறையில்  பிரதி மேயர் பதவி வழங்கப்பட வேண்டுமெனும்  அடிப்படையில் தனது பதவியினை இராஜினாமாச் செய்திருந்தாரெனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X