2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அசௌகரிகமாக 24 பசுக்களை கொண்டுவந்த இருவர் கைது

Editorial   / 2019 ஜூலை 18 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.ஜபீர்

சவளக்கடை பொலிஸ் பிரிவில்  அனுமதிப்பத்திரமின்றி  சித்திரவதைப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட 24 பசு மாடுகளையும் அதனை கொண்டு வந்த இருநபர்களையும் நேற்று  கைது செய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்திலிருந்து கல்முனை பிரதேசத்திற்கு அனுமதிப்பத்திரமின்றி சித்திரவதைப் படுத்தும் வகையில் கொண்டு வரப்படுவதாக  பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி றம்சீன் பக்கீர் தலைமையிலான குழுவினர் சவளக்கடை பிரதேசத்தில் வைத்து 24 பசு மாடுகளையும், அதனுடன் தொடர்புடைய கல்முனை சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த இருநபர்களும், கைது செய்துள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் கைப்பற்றப்பட்ட மாடுகளையும், சந்தேக நபர்களையும் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில்   ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .