Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2020 ஒக்டோபர் 08 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
அநாவசியமாக வீட்டைவிட்டு வெளியேறுவதை தவிர்த்துக்கொள்ளவேண்டுமென்று, திருக்கோவில் பிரதேச கொரோனா பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் பொதுமக்களுக்கு வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது பரவிவரும் கொவிட்19 தாக்கத்தைத் தடுப்பதற்காக பிரதேச செயலக ரீதியாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் முன்னாயுத்த கலந்துரையாடல் கூட்டம், திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரனின் வழிகாட்டலில், பதில்பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரன் தலைமையில், திருக்கோவில் பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் நேற்று (07) நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்வருமாறு:
வெளியிடங்களிலிருந்து திருக்கோவில் பிரதேசத்துக்கு வரும் நபர்கள் உடனடியாக கிராமசேவை அலுவலரிடம் பதியவேண்டும். அதேபோல், ஞாயிறு சந்தை உள்ளிட்ட பலதேவைகளின் நிமித்தம் இங்குவரும் வாகனங்கள் அனைத்தும் பதியப்படவேண்டும்.
பொதுமக்கள், வீட்டில் இருந்து வெளியேறும் போது முகக்கவசம் அணிதல், கூட்டமாக நிற்பதை தவிர்த்தல், வெளிச்சூழலில் இருந்து வீட்டுக்கு சென்றவுடன் கைகளை சவர்க்காரம் அல்லது கையை சுத்தசெய்யும் பதார்த்தங்களை இட்டுக் கழுவுதல், அநாவசியமாக வெளியில் வருவதை தடுத்தல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டன.
எடுக்கப்பட்ட இந்த சகல தீர்மானங்களும் அந்தந்த பிரிவு வணக்கஸ்தலங்களில் உள்ள ஒலிபெருக்கிகள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
53 minute ago
2 hours ago
2 hours ago