2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி ஆற்றுமண் ஏற்றிய ஐவர் கைது

Gavitha   / 2016 ஜூன் 05 , மு.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜமால்டீன்

அம்பாறை ஒலுவில், பள்ளக்காடு களிஓடை ஆற்றுவித்தையில் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி சட்டவிரோதமாக உழவு இயந்திரத்தின் இழுவைப் பெட்டியில் ஆற்றுமண் ஏற்றிய ஐந்து பேரை நேற்று சனிக்கிழமை (04) கைது செய்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்ட பொலிஸ் விஷேட குற்றத்தடுப்பு  பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே, இந்த ஐந்து பேரும் கைது செய்யப்பட்டதாகவும் இவர்கள் ஒலுவில், பள்ளக்காடு, தீகவாபி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X