2025 மே 12, திங்கட்கிழமை

அனர்த்த முகாமைத்து முன்னெச்சரிக்கை

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 20 , பி.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார் , சகா

அனர்த்த முகாமைத்து முன்னெச்சரிக்கை பிரதேச மட்ட பொதுக்கூட்டம், திருக்கோவில் பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளர் ரி.கஜேந்திரன் தலைமையில் இன்று (20) நடைபெற்றது.

இராணுவத்தின் 242 ஆவது கட்டளை அதிகாரி ஹெமால் பீரிஸின் பங்குபற்றுதலோடு நடைபெற்ற இக்கூட்டத்தில், திருக்கோவில் பிரதேசத்தில் எதிர்வரும் காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயம், கொரோனா வைரஸ் தொற்று, டெங்குத் தொற்று,  மலேரியா பரவல் தொடர்பான அபாயத்தைக் குறைப்பது தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கை தொடர்பில் ஆராயப்பட்டன.

இக்கலந்துரையாடலின் பின்னர் பல முக்கிய  திர்மானங்களும் எடுக்கப்பட்டன.

வடிகான்களைத் துப்புரவு செய்தல், வெற்றுக் காணிகளில் அமைக்கப்பட்டிருக்கும் பாவனையற்ற கிணறுகளை மண் இட்டு மூடுதல், டெங்கு, மலேரியா கட்டுப்படுத்தல் குழுவினர்களின் தீர்மானங்களை நடைமுறைக்குக் கொண்டுவருதல், பிரதேச செயலகம், இராணுவம், கடற்படை,  பொலிஸ் விசேட அதிரடிப்படை, சுகாதாரத் திணைக்களம், பிரதேச சபை,  ஏனைய தொடர்புடைய அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் ஒன்றிணைந்ததான வேலைத் திட்டங்களை அமுல்படுத்துதல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இத்தீர்மானங்களால் பிரதேச மட்டத்தில் ஏற்படும்  அனத்த அபாயங்களைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X