2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

அனுமதியற்று உலாவினால் பாரபட்சமற்ற நடவடிக்கை

Princiya Dixci   / 2021 ஜூன் 17 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ், எம்.சி. அன்சார்

கல்முனைப் பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 39 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இரு மரணங்களும் பதிவாகியுள்ளன.

இக்கால கட்டத்தில் முறையான அனுமதிப்பத்திரமற்று வீதிகளில் உலாவுவோர் மீது பாரபட்சமற்ற சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

இக்கால கட்டத்தில் மக்கள் இறுக்கமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்பட வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்தியத்தில் உள்ள கொவிட் தொற்றாளர்களை பராமரிக்கும் பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் 67 நோயாளர்களும், மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் நூறு நோயார்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இவ்விரு சிகிச்சை நிலையங்களுக்கும் 19 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X