2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அபிவிருத்தித்திட்டங்கள் அங்குரார்ப்பணம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 13 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

கல்முனை மாநகர சபையால் முன்னெடுக்கப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள்   திங்கட்கிழமை நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளன.

இதன்போது கல்முனை பொதுநூலக அபிவிருத்தி, பொதுச்சந்ததை புனரமைப்பு, சந்தாங்கேணி விளையாட்டு மைதான பார்வையாளர் அரங்கின் இரண்டாம் கட்ட நிர்மாணம், மருதமுனை பொதுநூலகத்தில் கோட்போர் கூட நிர்மாணம், சாய்ந்தமருதுத் தோணாவில் வெள்ளத்தடுப்பு அணைக்கட்டு நிர்மாணம், நற்பிட்டிமுனை அஸ்ரப் விளையாட்டு மைதான அபிவிருத்தி, பெரியநீலாவணை, இஸ்லாமாபாத், சேனைக்குடியிருப்பு ஆகிய இடங்களில் சனசமூக நிலைய நிர்மாணம், சாய்ந்தமருது கரைவாகு, கல்முனைக்குடி இறைவெளிக்கண்டம் ஆகியவற்றில் காணி நிரப்பல் போன்ற வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X