2025 மே 15, வியாழக்கிழமை

‘அபிலாஷைகள் ஒத்திருப்பவர்களோடு இணைந்து பயணிக்கத் தயார்’

Editorial   / 2020 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார்  

“தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாஷைகளை ஒத்ததான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றவர்களோடு இணைந்து பயணிக்கத் தயார்” என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று (23) மாலை நடைபெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் அவர் தொடர்ந்தும் கருத்துரைக்கையில், “நாம் பல ஏமாற்றங்களை பெரும்பான்மை தலைவர்களால் எதிர்கொண்டுள்ளோம். குறிப்பாக, இரு பெரும்பான்மை கட்சிகள் இணைந்த நல்லாட்சி அரசாங்கத்துடன் நாம் இணைந்து பயணம் செய்தபோதும் சில விடயங்களில் நன்மையடைந்தாலும் மக்களின் தீர்வு விடயத்தில் முன்னேற்றம் காணப்படவில்லை. இவ்வாறுதான் கடந்த காலத்தில் இருந்த அரசியல் தலைவர்களால் நாம் ஏமாற்றப்பட்டோம்” என்றார்.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கருத்துரைத்த அவர், தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளை ஒத்ததான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றவர்களோடு  இணைந்து பயணிக்கத் தயார் எனவும் ஒற்றுமையின் அடிப்படையில் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு, அதிக ஆசனத்தை பெறுவதற்குரிய முயற்சியை நாம் மேற்கொள்வோம் என்றும் கூறினார்.

மேலும், “எதிர்காலத்தில் பலமான கட்டமைப்பை அம்பாறை மாவட்டத்தில் உருவாக்குவதுடன், பல பணிகளை முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு எனக்குள்ளது. ஆனாலும், கடந்த தேர்தலில் சிலர் மாற்று முடிவுகளை மேற்கொண்டனர். இருந்தபோதிலும் அவர்களையும் இணைத்தே எமது பயணம் தொடரும்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .