2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

அமைச்சர் மஹிந்த அமரவீர அம்பாறைக்கு விஜயம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 22 , மு.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.கே.றஹ்மத்துல்லா

ஒலுவில் துறைமுகத்தில் காணப்படும் குறைபாடுகளைக் கண்டறிவதற்காக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, எதிர்வரும் வாரம் அம்பாறைக்கு வருகை தரவுள்ளதாக, விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

ஒலுவில் மீனவர் துறைமுக நுழைவாயில் மணல் அகற்றும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறித்து அறிவதற்காக, ஒலுவில் துறைமுகத்துக்கு சனிக்கிழமை (21) மாலை விஜயம் செய்து பார்வையிட்ட போதே, பிரதியமைச்சர் இவ்வாறு கூறினார்.

இவ்விஜயத்தில்; அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம்.தௌபீக், உள்ளிட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

தற்போது வானிலை மாற்றத்தினால் மணல் மூடப்பட்டுள்ள ஒலுவில் மீனவர் துறைமுகப் பிரச்சினையைக் கண்டறிந்து கொள்வதுடன், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொள்வதற்காகவே, அம்பாறை மாவட்டத்துக்கு, அமைச்சரை அழைத்து வரவுள்ளதாக, பிரதியமைச்சர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .