2025 மே 03, சனிக்கிழமை

அம்பாறையில் '20 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன'

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 05 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரம் வீடுகள் தேவைப்படுவதாகவும் இவ்வீடுகளை  எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் பெற்றுக் கொடுப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்மபாறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக தமிழ் மக்களின் பொருளாதாரம் அழிந்துள்ளது. இதனை  மீளவும் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது எனவும் அவர் கூறினார்.

மாதிரிக்கிராமம் எனும் வீடமைப்புத் தொகுதிக்கான நிகழ்வு, திருக்கோவில், காயத்திரி கிராமத்தில் இன்று (05) நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த மாதிரிக் கிராமத்தில் 4 இலட்சம் ரூபாய் பெறுமதியான 25 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான உத்தியோகபூர்மான விண்ணப்பப் படிவங்கள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது, 'தேவைப்படும் 20 ஆயிரம் வீடுகளில்  7 ஆயிரம் வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்பட வேண்யுள்ளதுடன், 13 ஆயிரம் வீடுகள் பகுதியளவில் புனரமைக்க வேண்டியுள்ளது' என்றார்.  

'அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களின் வீடில்லாத பிரச்சினைக்கு இரண்டு வருடங்களில் தீர்வு பெற்றுக்கொடுக்க முடியும் என நான் நம்புகின்றேன்' எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X