2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

அம்பாறையில் மினி சூறாவளி

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்,எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீசிய மினி சூறாவளி காரணமாக 02 கடைகள் மற்றும் 04 வீடுகளின் கூரைகள் அள்ளுண்டதுடன், 02 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவ்வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக காற்றுடன் மழை பெய்துவருகின்றது. இந்நிலையில், சுமார் அரை மணித்தியாலம் வரை வீசிய மினி சூறாவளியினால் விநாயகபுரம் சிவன் கோவிலை அண்டியுள்ள கடைகள் மற்றும் வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் வாழை, தென்னை, வேப்பமரங்கள் முறிந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X