2025 மே 12, திங்கட்கிழமை

அமெரிக்கத் துப்பாக்கி அம்பாறையில் மீட்பு

Princiya Dixci   / 2020 ஒக்டோபர் 18 , பி.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.சுகிர்தகுமார், பாறுக் ஷிஹான் 

அமெரிக்க நாட்டின் தயாரிப்பான துப்பாக்கியையும் அதற்குப் பயன்படுத்திய 40 ரவைகள் மற்றும் புதிய ரவைகள் இரண்டையும் அம்பாறை மாவட்ட திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர், நேற்று (17) இரவு கைப்பற்றியுள்ளனர்.  

சாகாமம், பெரியதிலாவ, ஊறக்கை பிரதேசமொன்றில் பிளாஸ்டிக் குழாயொன்றில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை கைப்பற்றப்பட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.  

“விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தத் துப்பாக்கி, ரவைகள் கைப்பற்றப்பட்டதாகவும் துப்பாக்கி சுத்தம் செய்யப்பட்டு இயங்கு நிலையில் காணப்பட்டது” என திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஆர்.டபிள்யூ.வி.எஸ். ராஜபக்‌ஷ தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X