2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அம்பாறை சம்பவத்தை கண்டித்து கண்டனப் பேரணி

Editorial   / 2018 மார்ச் 02 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், சம்மந்தப்பட்டவர்கள் மீது அரசாங்கம் சட்ட  நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் ஒலுவில் பிரதேச மக்கள் இன்று (02) ஜும்ஆ தொழுகையின் பின்னர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜம்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட கண்டனப் பேரணி பிரதான வீதி ஊடாக முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறான செயற்பாடுகள் எதிர்வரும் காலங்களிலும் இடம்பெறாமலிருக்கும் வகையில், அதற்கான வழி வகைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என கண்டனப் பேரணியில் கலந்துக்கொண்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .