2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறை- மட்டு எல்லையில் கொரோனா இராணுவச் சாவடி

Gavitha   / 2020 நவம்பர் 03 , மு.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெளிமாவட்டங்கள், வெளி பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் உள்நுழைந்துவிடாத வகையில், அம்பாறை- மட்டக்களப்பு மாவட்ட எல்லையில், இராணுவச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றை ஒழிக்கும் ஜனாதிபதி செயலணியின் தீர்மானத்துக்கு அமைவாகவே, மாவட்டங்களுக்கிடையில் அநாவசியமான போக்குவரத்துகளைக் குறைக்கும் வகையில், மாவட்டங்களின் எல்லைகளில் இராணுவச்சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுவருகின்றன​ எனத் தெரியவருகின்றது.

அம்பாறை – மட்டக்களப்பு எல்லையில் பெரிய நீலாவணைப்பகுதியில் நேற்று (2)திங்கட்கிழமை இராணுவச்சோதனைச்சாவடி  அமைக்கப்பட்டுள்ளது.

இராணுவச் சோதனைச் சாவடியை கடந்து செல்வோரிடம், இராணுவத்தினர், விசாரித்துவருகுன்றனர். ஆனால், பதிவு நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை.

எனினும், கொரோனாவின் முதலாவது அலையின் போது, நடைமுறையில் இருந்த இறுக்கமான கட்டுப்பாடுகள், இன்னும் ஓரிரு தினங்களில் முன்னெடுக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்தியாவசிய உணவுப்பொருட்களைக் கொள்வனவு செய்வோர். அத்தியாவசியப் பொருட்களை விற்பனைச் செய்வோர் ஆகியோருக்கு இலகுவான அனுமதி வழங்கப்படுகின்றது. எனினும், அநாவசியமான பயணங்களை கட்டுப்படுத்தும் வகையிலேயே இராணுவச் சோதனை சாவடிகள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுவருகின்றன என அறியமுடிகின்றது.

வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாயின், அவ்வாறானவர்களின் முழுமையான விவரங்கள், அச்சோதனை சாவடியின் ஊடாக திரட்டப்படும் எனவும் அறியமுடிகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X