Princiya Dixci / 2020 ஒக்டோபர் 11 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்
அண்மைக்காலமாக சீரற்ற வானிலை காரணமாக, அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்கள் கடலுக்குச் செல்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
குறிப்பாக, மருதமுனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில், பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு, காற்றின் திசை மாற்றம், நீரோட்டத்தில் ஏற்ப்பட்டுள்ள திசை மாற்றம், கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாகக் காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இவ்வாறான வானிலை மாற்றங்களால் கடலரிப்பு அதிகமாக ஏற்படுவதாலும் கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றனர்.
இதேவேளை, எதிர்வரும் 3 நாட்களுக்கு கடலில் அலை வீரியம் அதிகரிப்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்வதில் இருந்து தவிர்ந்துக் கொள்ளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
8 hours ago
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
22 Jan 2026