2024 மே 08, புதன்கிழமை

அம்பாறை மாவட்டத்திலேயே சிகிச்சை

Freelancer   / 2021 ஜூன் 16 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை கொவிட்-19 தொற்றாளர்களுக்கான சிகிச்சை மையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதால் வைத்தியசாலையின் வழமையான நடவடிக்கைகள் வேறொரு கட்டடத்தில் தொடர்ந்து இயங்கி வருவதாக, ஆயுர்வேத தள வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி டாக்டர் பீ.எம். முஹமட் றஜீஸ் இன்று (16) தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்படுபவர்களை வேறு மாவட்டங்களுக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்காமல் இம்மாவட்டத்திலேயே சிகிச்சை வழங்குவதற்கு அம்பாறை மாவட்டத்தில் புதிதாக பல கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலை கொரோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட்டுள்ளது.

இவ் வைத்தியசாலையில் கொவிட்-19 தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கு வேறு பிரிவாக பிரிக்கப்பட்டு, அதன் நடவடிக்கைகள் யாவும் நிறைவு பெற்றுள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் கொவிட்-19 தொற்றாளர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்களெனவும் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்று நோயாளர்களுக்கும் வைத்தியசாலைக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லாதவாறு பிரிக்கப்பட்டு, அருகிலுள்ள சுகாதார நிலையத்திற்கு வைத்தியசாலையின் நாளாந்த நடவடிக்கைகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வெளி நோயாளர்களுக்கான சிகிச்சைகள் மற்றும் கிளினிக் என்பன தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், நோயாளர்கள் எவ்வித தயக்கமின்றி தங்களுக்கான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியுமென கூறினார்.

எதிர்காலத்தில் தற்காலிகமாக ஒரு கட்டடத்தில் தங்கி சிகிச்சை பெறுவதற்கான விடுதி வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

M


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X