Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 மார்ச் 07 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மற்றும் இழந்த காணிகளை உரிய காணி உரிமையாளருக்கு வழங்க வேண்டுமென, காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணியின் தலைவர் பி. கைறுடீன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, இன்று (07) அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“விவசாயத்துக்கு வழங்கப்பட்டு பாரம்பரியமாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயக் காணிகளை, வனப்பாதுகாப்பு, வன விலங்கு பாதுகாப்பு, இராணுவ முகாம், புனித பூமி, ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்கு என எடுக்கப்பட்ட காணிகளை உரிய விவசாயிகளுக்கு மீள வழங்கப்பட வேண்டும்.
“அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒலுவில், பொன்னன்வெளி கண்ட முஸ்லிம்களுக்குச் சொந்தமான 600 ஏக்கர் காணியும், ஒலுவில், அஷ்ரப் நகர் 69 விவசாயக் குடும்பங்களுக்கான காணிகளும், அம்பலம் ஓயா பிரதேசத்தில் 750 ஏக்கர் விவசாயக் காணிகளும், ஆலையடிவேம்பு பாவா புரத்தில் 96 ஏக்கர் காணிகளும், பொத்துவில் வேகாமத்தில் 450 ஏக்கர் காணிகளும், கிரான்கோவை பாலையடி வட்டை 503 ஏக்கர் நெற் காணிகளும், கிரான் கோமாரியில் 177 ஏக்கர் காணிகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
“அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பாணாமை, தமண, திருக்கோவில், ஆலையடிவேம்பு, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் பெறும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் அபகரிக்கப்பட்டுள்ளன. இதனால் குறித்த விவசாயிகள், பொருளாதார ரீதியாக பின் தள்ளப்பட்டுள்ளனர்.
“குடியிருப்பு, விவசாயக் காணிகள் இல்லாத குடும்பங்களுக்கு இதற்கு முன் பகிர்ந்தளிக்கப்படாத அரச காணிகள் பாராபட்சமின்றி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
“குறித்த காணிப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு குறுகிய காலத்துக்குள் பிரச்சினைகளின் உண்மையைக் கண்டறிந்து, அதற்கான நீதி தீர்த்தல், பரிகாரத்தை வழங்குதல் மாத்திரமில்லாது, இவ்வாறு மீளவும் நிகழாமைக்கான நடவடிக்கைகள் கொள்கை மற்றும் சட்ட சீர்திருத்தங்களை செய்து அதனை பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்” என அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
32 minute ago
37 minute ago