2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகள் ஆராய்வு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருள் ஹுதா உமர், ஏ.எல்.எம்.ஷினாஸ்

அம்பாறையில் நிலவி வரும் மீன்பிடிசார் பிரச்சினைகள், மீனவர்களின் தேவைகள், ஒலுவில் துறைமுக விவகாரம் மற்றும் மீன் திருட்டு விடயம் தொடர்பில், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எடுத்துரைத்துள்ளனர்.

இது தொடர்பில் விளக்கும் மீனவர்கள் சந்திப்பு, மீன்பிடித் திணைக்கள அம்பாறை மாவட்ட காரியாலயத்தில், மாவட்ட உதவிப் பணிப்பாளர் நடராஜா ஸ்ரீரஞ்சன் தலைமையில் இன்று (27) நடைபெற்றது.  

இங்கு கலந்துகொண்ட மீன்பிடி அமைப்புக்கள், மீன்பிடி சம்மேளனம், மீன்பிடி சங்கங்களின் சமாசம் ஆகியவற்றின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் எனப் பலரும் தாம் நீண்டகாலமாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்க கோரி அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இதன்போது மீனவர்கள் படும் கஷ்டங்கள், தொழிலை விட்டு வெளியேரும் நிலை, சட்டவிரோத மீன்பிடி போன்றவற்றிலிருந்து விடுதலை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .