2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அம்பாறை வைத்தியசாலைக்கு பி.சி.ஆர் இயந்திரம்

Princiya Dixci   / 2021 மே 24 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை பொது வைத்தியசாலையில் பி.சி.ஆர் இயந்திரம் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார வேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில்  கொவிட் -19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான உயர் மட்டக் கூட்டம், இராஜாங்க அமைச்சர் விமல வீர திஸாநாயக்க தலைமையில், அம்பாறை மாவட்டச் செயலகத்தில் நேற்று (23) நடைபெற்றது.

இதன்போதே இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அன்டிஜன் பரிசோதனையின் அறிக்கையின் தாமத்தை தவிர்க்கும் முகமாகவும் அம்பாறை பொது வைத்தியசாலையில் பி.சி.ஆர் இயந்திரம் பொருத்தப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலங்களில் மக்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்கள், உணவுப் பொருட்கள் மற்றும் மரக்கறிகள் என்பவற்றை வழங்குபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டு, பாஸ் நடைமுறையை பிரதேச செயலக ரீதியாக நடைமுறைப்படுத்த  நடவடிக்கை எடுத்தல் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .