2025 மே 02, வெள்ளிக்கிழமை

அம்பாறையிலும் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா, எம்.என்.எம்.அப்ராஸ், அஸ்லம் எஸ்.மௌலானா

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கடந்த 3 தினங்களாக பலத்த மழை பெய்துகொண்டுள்ளது. இதனார் அம்மாவட்ட மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் நடவடிக்கையும் ஸ்தம்பித்துள்ளது. 

அம்பாறை மாவட்டத்தில் இன்று (22) காலை முதல் பெய்ய பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், தாழ் நிலப் பிரதேச குடியிருப்புகளும் வயல்களும் வெள்ளத்தில் முழ்கியுள்ளன. அத்துடன், வீதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதுடன், பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் சிரமத்தை எதிர் நோக்கினர்.

கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, சாய்ந்தமருது, காரைதீவு, நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள வயல்கள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X