2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அரச தொழிலைப் பெற ‘இனி திறமை சித்தி அவசியம்’

Gavitha   / 2016 நவம்பர் 21 , மு.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

“எதிர்காலத்தில் அரச தொழிலொன்றைப் பெற்றுக்கொள்ளவதாக இருந்தால் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம்,  தமிழ் உள்ளிட்ட ஆறு முக்கிய பாடங்களில் திறமைச் சித்திகளைப் பெற்றிருக்க வேண்டும்” என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

நிந்தவூர் வன்னியர் சதுக்கம் அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை மாலை (20) நடாத்திய க.பொ.த (சா/த) மாணவர்களுக்கான இலவச கல்விக் கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“க.பொ.த (சா/த) பரீட்சையானது ஒரு மாணவனின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் சிறந்த சக்தியாக காணப்படுகின்றது. தற்காலத்தில் மூன்றாம் நிலைக்கு கல்வியைப் பயிலுவதாக இருந்தாலும் கூட அடிப்படையாக க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் துணையாக நிற்கின்றன.

இதேவேளை, தற்காலத்தில் மாகாண சபையிலும் சில வெற்றிடங்களை நிரப்புவதென்றாலும் கூட க.பொ.த (சா/த) பரீட்சையில் கணிதம், விஞ்ஞானம், தமிழ் உள்ளிட்ட பாடங்களுடன் ஆகக்குறைந்தது 6 பாடங்களில் திறமைச் சித்தி தேவைப்படுகின்றது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X