Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.கார்த்திகேசு / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணிகள் தொடர்பாக கூடுதலான நிர்வாக ரீதியாக பிரச்சினைகள் அம்பாறை மாவட்டத்தில் காணப்படுகின்ற போதிலும் மக்களுக்கான காணியளிப்புகளை வழங்க வேண்டும் எனும் நோக்குடன் அரசும், பிரதேச செயலாளர்களும் துரிதமாக செயற்பட்டு காணிகளை வழங்குவதற்கு முன்வருகின்றபோது, அதனை வந்து பெற்றுக் கொள்வதில் மக்கள் பின்னடிப்புக்கள் செய்வது தமக்கு கவலையளிப்பதாக அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தள்ளார்.
அம்பாறை, திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் 251 பேருக்குக் காணியளிப்பு மற்றும் காணி அனுமதிப் பத்திரங்கள் கையளிக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, மேற்படி கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த யுத்தகாலங்களில் காணிகளை வழங்குவதில் ஒருசில சிக்கல்கள் காணப்பட் போதிலும் தற்போது இந்த அரசாங்கள் காணிகள் வழங்குவதில் தாமதங்களை விடுத்து விரைவாக வழங்கி வருகின்றது.
“இந்நிலையில் கடந்த காலங்களில் இரண்டு ஏக்கர் வயல் காணிகளும் அரை ஏக்கர் மேட்டு நிலக் காணிகளும் அரசினால் பகிர்ந்தளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று நாட்டின் சனத்தொகையை கருத்தில் கொண்டு தற்போது ஒரு ஏக்கர் வயல் காணிகளும் கால் ஏக்கர் மேட்டு நிலக் காணிகளும் வழங்கப்பட்டு வருகின்றது.
“இவ்வாறு காணிகள் பெற்றுக் கொள்வதில் சிரமங்கள் காணப்படுகின்ற போதிலும் காணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கு காணிகளை சட்டரீதியாக அரசு வழங்க முன்வருகின்ற போது அதனை பெற்றுக் கொள்வதற்கு மக்கள் கருசணை காட்டாது இருப்பது எங்கள் மத்தியில் கேள்விக் குறிகளை ஏற்படுத்துகின்றது.
“இன்று அரசாங்கத்தின் நோக்கம் எந்தவொரு காணியையும் தரிசு நிலமாக வைத்திருக்காது தேசிய உணவு உற்பத்தியின் கீழ் சகல நிலங்களிலும் உணவு உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில் தான் இன்று இந்த காணிகளை உங்களுக்கு அளிப்பு செய்கின்றோம்.
“இக்காணிகளை சட்டத்தக்கு முறனாக விற்பனை செய்ய முடியாது. தாங்கள் பெற்றுக் கொண்ட காணிகள் சரியான முறையில் பேணப்படாத நிலையில் மீண்டும் அந்த காணிகளை அரசின் சட்டத்துக்கு அமைவாக பிரதேச செயலாளர் பெற்றுக் கொள்வதற்கு அதிகாரம் உள்ளது. எனவே இந்த காணிகளின் ஊடாக உங்கள் குடும்பம் பொருளாதாரத்தில் மேம்படுதவதுடன் அரசின் நோக்கமும் வெற்றி பெறுதற்கும் ஒத்துழைப்பக்களை நல்க வேண்டும்” என அம்பாறை மாவட்ட மேலதிக அரச அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தள்ளார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago