2025 மே 15, வியாழக்கிழமை

அறிவிப்பாளர் கலீலுர் ரஹ்மான் காலமானார்

Editorial   / 2020 ஒக்டோபர் 06 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.சி. அன்சார்

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் நேத்ரா தேசிய தொலைக்காட்சியிலும் செய்தி வாசிப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் கடமையாற்றிய ஏ.சி.எம். கலீலுர் ரஹ்மான, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (04) இரவு காலமானார்.

தனது 48ஆவது வயதில் காலமான கலீலுர் ரஹ்மான், சொல் வழு இல்லாது சிறந்த உச்சரிப்பும் நயமும் கொண்ட ஜனரஞ்சக அறிவிப்பாளராவார்.

அன்னாரது ஜனாஸா, கொழும்பிலிருந்து அவரது சொந்த ஊரான சம்மாந்துறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, நேற்று (05) மாலைநேர அஸர் தொழுகையின் பின்னர், சம்மாந்துறை மஸ்ஜிதுல் ஸலாம் ஜும்மா பள்ளி மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

அவரது மறைவைக் கேட்டு வானொலி, தொலைக்காட்சி நேயர்களும் ஊடகத்துறையினரும் அனுதாபம் வெளியிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .