Suganthini Ratnam / 2017 ஜூலை 10 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா, வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்றுக் கடலில் நீராடியபோது, அலையால் அள்ளுண்டு காணாமல் போன சகோதரர்கள் இருவரும் சடலங்களாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
நாவற்காட்டைச் சேர்ந்த குமாரசுவாமி சஜித், குமாரசுவாமி சிதுஜன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
நண்பர்கள் மூவர் ஞாயிற்றுக்கிழமை (9) கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது, 16 வயதுடைய சிறுவன் ஒருவன் அலையில் அள்ளுண்டுள்ளான். இச்சிறுவனைக் காப்பாற்றுவதற்காக முற்பட்ட இச்சகோதரர்கள் இருவரும் அலையால் அள்ளுண்டு காணாமல் போயினர். இவர்களைத் தேடி வந்த நிலையில், இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன எனவும் பொலிஸார் கூறினர்.
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026