2025 மே 15, வியாழக்கிழமை

அஷ்ரப் ஞாபகார்த்த போட்டிகள்

Editorial   / 2020 செப்டெம்பர் 07 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனித நேய நற்பணிப் பேரவை, சம்மாந்துறை – ஸ்ரீலங்கா, இர்ஷாத் ஏ. காதர் நற்பணி மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில், முஸ்லிம் சமூகத்தின் தேசியத் தலைவராகத் திகழ்ந்த சட்டமுதுமாணி எம்.எச்.எம்.அஷ்ரபின் 20 ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, பேச்சு, கட்டுரை, கவிதை ஆகிய போட்டிகள், அம்பாறை மாவட்ட ரீதியில் நடத்த ஏற்பாடாகியுள்ளது.

“அஷ்ரப் எனும் பன்முக ஆளுமை”எனும் தலைப்பில் அமைந்த இப்போட்டிகளுக்கான ஆக்கங்கள், இலக்கியம், சட்டம், அரசியல் உள்ளிட்ட துறைகளைத் தழுவியதாக இருத்தல் வேண்டும்.

பங்குபற்ற விரும்புவோர் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், பங்குபற்றும் போட்டி ஆகிய விவரங்களை 0773063561 என்ற இலக்கத்துக்கு வட்ஸ்அப் மூலம் அனுப்பி வைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் 03 இடங்களைப் பெறுவோருக்கு பெறுமதியான பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

அம்பாறை மாவட்டத்தை வதிவிடமாகக்  கொண்ட 20 வயதுக்கு மேற்பட்ட யாவரும் போட்டியில் பங்குபற்றலாம். மேலதிக விவரங்களுக்கு:  0770696559 / 0772309234 ஆகிய அலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .