Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2018 மே 16 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா, ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, ஒலுவில், அஷ்ரப் நகர் பிரதேசத்தில் சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளை மீள வழங்குமாறு கோரி, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக்கு முன்னால் காணி உரிமையாளர்கள், இன்று (16) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“1952ஆம் ஆண்டுக்கு முன்னர் எங்களது மூதாதையர்களால் காடு வெட்டி வாழந்து வந்த காணிகளுக்கு, 1980ஆம் ஆண்டு அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தால் காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டது.
“இக்காணி அபகரிக்கப்பட்டு, தற்போது அங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என, காணி உரிமையாளர்கள் அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் ஏ.எல். மிஸ்பா தெரிவித்தார்.
சுமார் 63 ஏக்கர் ஹெக்டேயர் காணி, கையகப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், அக்காணிகளில் வசித்து வந்த 59 குடும்பங்கள், கடந்த 5 ஆண்டுகளாக வாழ்வதற்கு இடமில்லாமல் கஷ்டப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
“யானை வேலி நிர்மாணிப்பது என்ற போர்வையில் எல்லைக் கற்கள் அகற்றப்பட்டு, எங்களது காணிகளை, தற்போது வன இலாகாத் திணைக்களம் பொறுப்பேற்றுள்ளதாக நாம் அறிகின்றோம்.
“எனவே, இராணுவ முகாமை அகற்றி, எங்களது காணிகளை மீள வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போகின்றோம்” என்றும் அவர் எச்சரித்தார்.
இக்கோரிக்கை அடங்கிய மகஜர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜிடம் கையளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago