2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

பொத்துவில் உப வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட 12 பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள 19 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி  தெரிவித்தார்.
மேற்படி 12 பாடசாலைகளிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண கல்வியமைச்சரிடம் மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மாகாணசபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, 'பொத்துவில் உப வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட மேற்படி பாடசாலைகளில் ஒரு வருட ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றி சேவைக்காலத்தை பூர்த்திசெய்த 19 ஆசிரியர்கள், தங்களின் பழைய பாடசாலைகளுக்கு மீளச் செல்கின்றனர். இவ்வாறு செல்லும் 19 ஆசிரியர்களுக்குப் பதிலாக வேறு ஆசிரியர்களை நியமிக்குமாறே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது' என்றார்.  

"பொத்துவில் உப வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட மேற்படி 12 பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புமாறு இப்பிரதேச மக்கள் பல போராட்டங்களை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில், கிழக்கு மாகாண கல்வியமைச்சின் முன்னாள் செயலாளர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவினால் கல்முனை வலயத்திலிருந்து 19 ஆசிரியர்களும் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை கல்விக் கோட்டங்களிலிருந்து 03 ஆசிரியர்களும் பொத்துவில் உப வலயக் கல்வி அலுவலகத்தில்; வெற்றிடங்கள் நிலவிய பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டனர். மேற்படி பாடசாலைகளில் 2014ஆம் ஆண்டு முதல்  2015.12.30வரை கடமையாற்றிவிட்டு 2015.12.31ஆம் திகதி தங்களின் பழைய பாடசாலைகளில் கடமைகளை ஏற்குமாறு மேற்படி 19 ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்ட இடமாற்றக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, 19 ஆசிரியர்களும் எதிர்வரும் 31.12.2015 அன்று பழைய பாடசாலைகளில் தங்களின் கடமைகளை ஏற்கவுள்ளனர்' எனவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X