Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2017 நவம்பர் 23 , பி.ப. 12:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசிரிய உதவியாளர்களை, ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குமாறும் தமக்கு வழங்கப்பட்டு வரும் சிறிய கொடுப்பனவை அதிகரிக்குமாறும் கோரி, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் ஆசிரிய உதவியாளர்கள், கவனயீர்ப்புப் பேரணியொன்றை இன்று (23) நடத்தினர்.
கலாசலையில் பயின்று வரும் சுமார் 500க்கும் மேற்பட்ட உதவி ஆசிரியர்கள், தமது கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு, கலாசாலை வளாகத்திலிருந்து அக்கரைப்பற்று-கல்முனை பிராதான வீதிக்கு வந்து கவனயீர்ப்பை நடத்தினர்.
மலையகம் மற்றும் பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்றுள்ள 3,021 பேரையும் ஆசிரியர் சேவைக்குள் அரசாங்கம் உள்ளீர்ப்பு செய்ய வேண்டும் எனக் கோரி, அட்டாளைச்சேனை, கோப்பாய், கொட்டகல, மட்டக்களப்பு ஆகிய அரசனர் ஆசிரியர் பயிற்சி காலாசாலைகளில் இந்தக் கவனயீர்புகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
“எங்களைப் போன்று, இவ்வாறான நியமனங்களை பெற்றுள்ள பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஆசிரிய உதவியாளர்களை, 3/2 ஆசிரிய சேவைக்குள் அரசாங்கம் ஈர்ப்பு செய்துள்ள போதிலும் எங்களுக்கு மட்டும் சிறுதொகை கொடுப்பனவு வழங்கி, இச்சேவையில் வைத்திருப்பதை நியாயப்படுத்த முடியாது” என உதவி ஆசிரியர்கள், இதன்போது தெரிவித்தனர்.
தமக்கு வழங்கப்பட்டு வரும் 10,000 ரூபாய் கொடுப்பனவு, இன்றைய வாழக்கைச் செலவை சமாளிக்க முடியாதுள்ளது. இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கும், குடும்ப சுமைக்கும் உள்ளாகி இருப்பாதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago