Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 28 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
தேசிய கல்வியக் கல்லூரிகளில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பயிற்சியை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரர்களுக்கு ஆசிரியர் நியமனத்தை காலம் தாமதிக்காது வழங்குமாறு கோரி, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள தெரிவித்த, இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் உப தலைவர் எஸ். பிரதீப், நாட்டில் பாடசாலைகளில் நீண்ட காலமாக ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்ற போதிலும், 2015/2017ம் கல்வி ஆண்டில் தேசியக் கல்வியற் கல்லூரிகளில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியர் பயிலுனர்கள் 04 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதையிட்டு எமது ஆசிரியர் சேவை சங்கம் அதிருப்தியை தெரிவித்துள்ளது.
2015/2017ம் கல்வி ஆண்டுக்குரியவர்கள் 2013ம் ஆண்டு கா.பொ.த உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை கல்விக் கல்லூரிகளுக்கு இணைத்து கொள்வதிலும், 03 ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டிருந்ததாகவும், சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.அத்துடன் 03 ஆண்டுகளில் நிறைவு செய்ய வேண்டிய டிப்ளோமா பயிற்சி நெறியை இவர்கள் 06 வருடங்கள் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனையும் கல்வியமைச்சு பொறுப்பேற்க வேண்டும் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2018ம் ஆண்டில் பிரதேச செயலாளர் மட்டத்தில் காணப்பட்ட ஆசிரியர் பற்றாக் குறையை அடிப்படையாகக் கொண்டு இம் மாணவர்களில் கல்வித் தேவைகளை கருத்திற் கொண்டு 19 கல்வியற்கல்லூரிகளில் இணைத்துக் கொள்ளப்பட்ட இந்த டிப்ளோ தாரிகளுக்கு தாமதமின்றி ஆசிரியர் நியமனம் வழங்க வேண்டுமென அம் மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago