2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

ஆட்டோக்களை மீளப் பதியவும்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 09 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

கிழக்கு மாகாணத்தில் தொழில் ரீதியாக முச்சக்கரவண்டி போக்குவரத்து சேவையிலுள்ள சகல முச்சக்கரவண்டிகளையும் எதிர்வரும் டிசெம்பர் 31ஆம் திகதிக்குள் மீள்பதிவு செய்துகொள்ளுமாறு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் இன்று (09) அறிவித்துள்ளார்.

முச்சக்கரவண்டிகளை பதிவு செய்வதன் மூலம் தங்களது தொழிலுக்கு பாதுகாப்பு, சமூகத்தின் வரவேற்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு என்பன கிடைக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு முச்சக்கரவண்டிகளை பதியாத உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் மாவட்ட காரியாலயம் இலக்கம் -864, டீ.எஸ்.சேனநாயக்க மாவத்தை, அம்பாறை எனும் முகவரியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், மாவட்ட காரியாலயம் சந்திராலேன், திருகோணமலை வீதி, மட்டக்களப்பு எனும் முகவரியிலும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், தலைமைக் காரியாலயம் கல்வி அமைச்சு கட்டடம், உட்துறைமுக வீதி, திருகோணமலை எனும் முகவரியிலும் பதிவுகளை மேற்கொள்ளமுடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X