2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியருக்கு டெங்கு

எஸ்.கார்த்திகேசு   / 2017 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் பணிபுரிந்த 28 வயதான பெண் வைத்தியரொருவர் டெங்கு நோயால் பீடிக்கப்பட்டிருந்தார் என்றும், மேலதிக சிகிச்சைகளுக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் டெங்கு அவசரப் பிரிவுக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார் என்றும், திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தய அத்தியட்சகர் பி.மோகனகாந்தன், இன்று (17)தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட பெண் வைத்தியர், கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார் என்றும், நேற்று முன்தினம் (16) அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, கொழும்புக்கு, நேற்று (16) இரவு மாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் தங்கியிருக்கும் அந்த வைத்தியர், இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்புக்குச் சென்று திரும்பினார் எனவும் வைத்திய அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .